ஆதிவராக பெருமாள் கோவில் தேரோட்டம்


ஆதிவராக பெருமாள் கோவில் தேரோட்டம்
x

கல்லிடைக்குறிச்சி ஆதிவராக பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி சன்னதி தெருவில் உள்ள ஆதிவராக பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி கண்ணாடி சப்பரம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், கோரதம், 8 கால் சப்பரம், பூம்பல்லக்கு, குதிரை வாகனம், பின்ன வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருதல் நடைபெற்றது.

10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதைமுன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 6 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 8 மணிக்கு கோவிந்தா, கோவிந்தா, ஆதிவராகா, ஆபத்பாண்டவா என பக்தி கோஷங்கள் முழங்க தேரை கீழ ரதவீதியில் இருந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி வழியாக 10.50 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7 மணிக்கு சுவாமி தேரில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளினார்.



Next Story