இங்கிலாந்து கடத்தல்காரரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு


இங்கிலாந்து கடத்தல்காரரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து கடத்தல்காரரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தூத்துக்குடி கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனதன் தோர்ன் (வயது 47) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி மடக்கி பிடித்தனர். அவர் மும்பையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் கோர்ட்டு, ஜோனதன் தோர்னுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

இதனை எதிர்த்து ஜோனதன் தோர்ன் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் தீர்ப்பை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story