அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை


அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) திரிவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை (பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவற்றிற்கு கடந்த ஜூன் மாதம் முதல் 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விஜயதசமியை முன்னிட்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கு 13 முதல் 25 வயது வரை உள்ள 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அரசு பஸ்களில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயண சலுகை வசதி அளிக்கப்படும். மேலும் 3 ஆண்டு பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் மற்றும் கோவில்களில் பணி, அரசு பள்ளிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு தலைமை ஆசிரியரை 04343-234001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story