அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்
திருப்பூர்
சேவூர்
சேவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 450 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்க்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இது குறித்து பள்ளி தலைமையாசிரியர், கொண்டப்பன் கூறும்போது " இப்பள்ளியில் சிறப்பான தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி, உடற்பயிற்சி, கராத்தே மற்றும் யோகா, எளிமையான முறையில் இந்தி பேச்சு வகுப்புகள், மாணவர்களுக்கு அறிவு திறன் வளர்க்க தனி நூலக வசதி, போன்ற கூடுதலான செயல்பாடுகளுடன் பள்ளி திகழ்ந்து வருகிறது. இந்த கல்வியாண்டில், இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்றார்.
-
Related Tags :
Next Story