மாணவர் சேர்க்கை தொடக்கம்


மாணவர் சேர்க்கை தொடக்கம்
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவாலா அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே தேவாலா அட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் சங்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தியாகராஜா தலைமை தாங்கினார். தலைவி ராஜமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் பள்ளியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று பொறுப்பு ஆசிரியர் வித்யா பேசினார். பின்னர் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. இதில் ஆசிரியைகள் நிஷா, ராஜலட்சுமி, தர்ஷனா தேவி, ரேவதி மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.


Next Story