அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
x

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர் படை மாணவர்கள், அந்தமான் நிக்கோபார் தமிழ் வழி மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெற்றது. இதையடுத்து முதல் கட்ட பொது கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் பாடப்பிரி விற்கான கலந்தாய்வு நடந்தது. 2-ந் தேதி வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படாத இடங்களுக்கும். 5-ந் தேதி கணிதம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வும் 6-ந் தேதி கணிதம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நிரப்பப்படாத இடங்களுக்கு கலந்தாய்வும், 8-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கான கலந்தாய்வும், 9-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கான நிரப்பப்படாத இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இணையவழி விண்ணப்ப நகல், மாற்றுசான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்பட்டியல், சாதி சான்றிதழ், மாணவரின் ஆதார் அட்டை, மாணவரின் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், மாணவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 6 உள்ளிட்ட ஆவணங்களையும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் கொண்டு வர வேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


Next Story