அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு கலை-அறிவியல் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) குமரேச மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ேநற்று முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. வருகிற 19-ந்தேதி வரை பதிவு செய்யலாம்.தரவரிசை பட்டியல் 23-ந்தேதி வெளியிடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 25 முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட பொது கலந்தாய்வு 30-ந்தேதி முதல் ஜூன் 9-ந் தேதி வரையிலும், 2-ம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் செய்ய வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story