அரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை


அரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் அரசு ஐ.டி.ஐ. மற்றும் தனியார் ஐ.டி.ஐ.களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இந்த ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை இன்று வரை நீடிக்கப்பட்டு உள்ளது. தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி ஓராண்டு தொழிற்பிரிவுகளில் கணினி இயக்குபவர், சூரிய மின்சக்திவியலாளர், தையல் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில் பிரிவுகளான இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேனுபேக்ச்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் ஆட்டோமேசன் படிப்புகளுக்கும், 2 ஆண்டு தொழிற்பிரிவுகளில், பிட்டர், டர்னர், பின்னலாடை தொழில் நுட்பவியலாளர், எந்திர படவரைவாளர், மெக்கானிக் மின்னணுவியல், எந்திர வேலையாளர் மற்றும் புதிய தொழிற்பிரிவான அட்வான்ஸ்டு மெசினிங் டெக்னீசியன், மெக்கானிக் மின்சார வாகனம் ஆகிய தொழில் பிரிவுகளுக்கு 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 14 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், மேலும் பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர் அரசு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று சேரலாம். பயிற்சியாளர்களுக்கு அரசின் சார்பில் மாதாந்திர கல்வி உதவி தொகை ரூ.750 வழங்கப்படும். விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள் மற்றும் வரைபட கருவிகள் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story