விழுப்புரத்தில் நாளை நடைபெறும் பன்னோக்கு முகாமில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை


விழுப்புரத்தில் நாளை நடைபெறும் பன்னோக்கு முகாமில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நாளை நடைபெறும் பன்னோக்கு முகாமில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற இருப்பதாக கலெக்டா் பழனி தொிவித்துள்ளாா்.

விழுப்புரம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பன்னோக்கு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமின்போது பல்வேறு அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழில்புரியும் தொழிலாளர்கள், நலவாரியங்களில் தங்களை பதிவு செய்வதற்கான நலவாரிய சேர்க்கை முகாமும் நடைபெறுகிறது. எனவே இம்முகாமில் கலந்துகொள்ள உள்ள தொழிலாளர்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வயதுச்சான்று, பணிச்சான்று, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு நலவாரியத்தில் தங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வருகைபுரியும் தொழிலாளர்கள், தங்களுக்கு இசிஜி, ஸ்கேன், ரத்தப்பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகளை பெற்றும் பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story