திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில்காலியாக உள்ள இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கைநாளை தொடங்குகிறது
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை நாளை தொடங்குகிறது.
திண்டிவனம்,
தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில், இளநிலை அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புவியமைப்பியல், தாவரவியல், புள்ளியியல், மற்றும் இளநிலை வணிகவியல் , வணிக நிர்வாகவியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம் ஆகிய அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு வராண்டா மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
இதில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கும், நாளை மறுநாள்(புதன்கிழமை) மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 6-ந்தேதி(வியாழக்கிழமை) ஆதிதிராவிடர்களுக்கும், 7-ந்தேதி அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
2023-24 ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்து இதுவரை இடம் கிடைக்காத தகுதியுடைய மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் அறிவுடைநம்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.