விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை
விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடந்தது.
திருவண்ணாமலை
விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதைத் தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம்.
அதன்படி இன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
அங்கு குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில், 'அ' என்று எழுத கற்றுக்கொடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை ஆனைகட்டி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் பலர் சேர்ந்தனர். ஆசிரியை செல்வி அவர்களின் கைபிடித்து 'அ' எழுத கற்றுக் கொடுத்தார்.
இதேபோல தனியார் பள்ளிகளிலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர்.
Related Tags :
Next Story