அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
x

திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி 

தினத்தந்தி 14 Jun 2023 7:39 PM IST (Updated: 15 Jun 2023 10:11 AM IST)
t-max-icont-min-icon

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாநில அளவிலான கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கு www.skillraining.tn.gov.in எனும் இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக மாணவர்களுக்கு உதவ அரசு தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 செலுத்தி வருகிற 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் இணையதள கலந்தாய்வு தரவரிசை பட்டியல், கலந்தாய்வு விவரம் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரலாம்.

இதுதொடர்பான விவரங்களுக்கு, திண்டுக்கல்-நத்தம் சாலையில் குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.


Next Story