கலை பயிற்சி வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்


கலை பயிற்சி வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் கலை பயிற்சி வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, மண்டல கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையத்தில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலை பயிற்சி வகுப்புகள் பள்ளி மாணவர்களுக்கு வாரந்தோறும் விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் நடக்கிறது. 5 முதல் 16 வயது உள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் இக்கலை பயிற்சி வகுப்பில் ஆண்டு பயிற்சி கட்டணமாக ரூ.200 செலுத்தி விருப்பமுள்ள கலைப்பிரிவை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில கலைப்போட்டிகள், உள்ளூர் அளவிலான இளந்திரு விருது, தென்மண்டல அளவிலான இளந்திரு விருது, டெல்லியில் நடக்கும் குழந்தைகள் தின விழா, உலக சுற்றுச்சூழல் தின மாநாடு ஆகியவற்றில் ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்கள் தயார் செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவார்கள். பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாக ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் ராஜன்பிரகாசத்தை 94442 71492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவல் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story