அ.தி.மு.க. அரசின் திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க.வின் சாதனை


அ.தி.மு.க. அரசின் திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க.வின் சாதனை
x
திருப்பூர்


அ.தி.மு.க. அரசின் திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று அ.தி.மு.க.புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பேசினார்.

அ.தி.மு.க.கண்டன ஆர்ப்பாட்டம்

தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை, மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்படி உடுமலை நகர அ.தி.மு.க. சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

நான் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.50 கோடி நிதியை ஒதுக்கி தந்தது. இந்த நிதியின் மூலமாகத்தான் தற்போது உடுமலை நகராட்சி பகுதியில், தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் ஆகியவை தூர்வாரப்பட்டுவருகிறது. மத்திய பஸ்நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. புதிய மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது. நகராட்சி வாரச்சந்தையில் மேம்பாட்டு பணிகள், பூங்காக்களை மேம்படுத்துதல் பணிகள் நடக்கிறது.

எந்த நிதியையும் ஒதுக்கவில்லை

தற்போது உடுமலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப்பணிகளும் அம்மாவின் அரசால் நிதி ஒதுக்கீடு செய்து கொண்டு வரப்பட்டதுதான். தி.மு.க. அரசு அமைந்தபிறகு உடுமலை நகராட்சியின் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு ஆடு, கோழி வழங்கினோம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடுத்தினருக்கு தாலிக்கு தங்கம் வழங்கினோம். அப்படி அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதான் தி.மு.க. அரசின் சாதனை. எனவே அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீண்டும் கொண்டுவரவேண்டும். அடுத்து வரக்கூடிய அரசு நமது அ.தி.மு.க.அரசாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொஅ.தி.மு.க. அரசின் திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க.வின் சாதனைஅ.தி.மு.க. அரசின் திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க.வின் சாதனைண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை நகர செயலாளர் ஏ.ஹக்கீம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆவின் தலைவர் வக்கீல் கே.மனோகரன், முன்னாள் நகராட்சி தலைவர் சாஸ்திரிசீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பர்ராஜன், சோமசுந்தரம், இளஞ்செழியன், பேரூர் செயலாளர்கள் நரிமுருகன், சுந்தர்ராஜ், வர்த்தக அணி உதயகுமார், சின்னவீரம்பட்டி காளிமுத்து, அண்ணா தொழிற்சங்க பேரவை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம், உடுமலை கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தலைவர் ஜி.தனலட்சுமி என ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story