பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு:தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்


பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு:தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெளியான இந்த தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவ சிலைகளுக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம், நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், துணை செயலாளர் அறிவாளி, இணை செயலாளர் சுரேஷ், பொருளாளர் பார்த்திபன், அண்ணா பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், பலராமன், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, ராஜா, சக்திவேல், மாதையன், முன்னா, மாதேஷ், நாகராஜன், செந்தில் வேல், மாணவரணி நிர்வாகி மாது மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோன்று தர்மபுரி நான்கு ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story