அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
தலைஞாயிறில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
தலைஞாயிறு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. .கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் அழகப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அவை. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வருகிறது. குறிப்பாக தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளது என்றார். இதில் மாவட்ட பொருளாளர் சண்முகராசு, மேற்கு ஒன்றிய செயலாளர் சவுரிராஜன், பேரூர் செயலாளர் பிச்சையன், மாவட்ட கவுன்சிலர் இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story