அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
தலைஞாயிறில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூர் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூர் கழக அவைத் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் பிச்சையன் வரவேற்று பேசினார். தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், ஒன்றிய செயலாளர்கள் அவை. பாலசுப்பிரமணியன், சுப்பையன், சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளருமான ஓ.எஸ். மணியன் பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. தமிழ்நாடு அரசு கவனம் எடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். கூட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் சண்முகராசு, மாவட்ட கவுன்சிலர் இளவரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் பேரூர் செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
Related Tags :
Next Story