அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. சார்பில் வருகிற 20-ந் தேதி மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக புதுக்கோட்டையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''மாநாடு தொடர்பாக 15 முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். ஆளும் கட்சியாக இருக்கும் போது மாநாடு, பொதுக்கூட்டம் நடத்துவது என்பது மிக எளிது. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் போது நமது செல்வாக்கை, பலத்தை காட்டுவதற்காக தான் வருகிற 20-ந் தேதி மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. அ.தி.மு.க. ஆளும் கட்சியாக வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்'' என்றார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.