அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x

திட்டச்சேரியில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் தி.மு.க. நகர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் ஆசைமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட துணைச்செயலாளர் அபுசாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முயினுதீன் வரவேற்றார். அ.தி.மு.க.வினர் 51-வது தொடக்கவிழாவை முன்னிட்டு அனைத்து கிளை கழகங்கள் தோறும் கட்சியின் கொடியேற்ற வேண்டும். தொடர்ந்து கட்சிகளின் பணியாற்றும் கழக முன்னோடிகளுக்கு சிறப்பு செய்ய வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் அதிக உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இதில் அவைத்தலைவர் மன்சூர்ஷா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் விஸ்வநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story