அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
திருவெண்காடு பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் பங்கேற்பு
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே திருநகரியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் கட்சியினரிடம் கேட்டறிந்தார். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் அகோர மூர்த்தி நன்றி கூறினார். இதேபோல் திருவெண்காட்டில் நடந்த கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். திருவாளியில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் சிவமனோகரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்றார்.