அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
பரப்பாடியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
பரப்பாடியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை என்.கணேசராஜா தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் நாராயணபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்து ஆலோசனைகள் வழங்கினார்கள். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், வழக்கறிஞர் ஜெயபாலன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பரப்பாடியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story