அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவர் ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், மணிவேல் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உப்பிலியபுரம் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதற்கான கல்வெட்டை அலுவலகம் முன்பு வைக்க கோரி பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர் வக்கீல் அத்தியப்பன் வெளிநடப்பு செய்து அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் கவுன்சிலர்களான தனலட்சுமி, லலிதா ஆகியோரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story