அ.தி.மு.க. சுவர் விளம்பரங்களில்ஓ.பன்னீர்செல்வம் பெயர் அழிப்பு


அ.தி.மு.க. சுவர் விளம்பரங்களில்ஓ.பன்னீர்செல்வம் பெயர் அழிப்பு
x

தூத்துக்குடியில் அ.தி.மு.க. சுவர் விளம்பரங்களில்ஓ.பன்னீர்செல்வம் பெயர் அழிக்கப்பட்டது.

தூத்துக்குடி

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமைய அமைய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனது. இதனால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் அருகே உள்ள அ.தி.மு.க. சுவர் விளம்பரத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் பெயரை அ.தி.மு.க.வினர் அழித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story