அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்
வேடசந்தூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது.
திண்டுக்கல்
வேடசந்தூர் ஒன்றியம் குட்டம், பூதிபுரம், பாலப்பட்டி, கூவக்காபட்டி ஆகிய ஊராட்சிகளில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் பரமசிவம் விண்ணப்ப படிவத்தை வழங்கினார். இதில் மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை செயலாளர் போஸ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நிலாதண்டபாணி, கூட்டுறவு சங்க தலைவர்கள் வைரமுத்து, வேளாங்கண்ணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சேட்டைகார்த்தி, வேடசந்தூர் பேரூர் இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பாண்டிகணேஷ் மற்றும் அந்தந்த ஊராட்சி நிர்வாகிகள் கலந்்துகொண்டனர்.
Related Tags :
Next Story