தீர்மானத்திற்கு அ.தி.மு.க.-தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு


தீர்மானத்திற்கு அ.தி.மு.க.-தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு
x

தலைஞாயிறு பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க.-தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் குகன், துணைத் தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இளநிலை உதவியாளர் குமார் வரவேற்றார்.கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி (அ.தி.மு.க.) பேசுகையில், தலைஞாயிறு பேரூராட்சி 7-வது வார்டில் அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதை இடத்தில் பேரூராட்சி வாடகை கடைகள் இருந்தன. இந்த கடைகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது.இதை தொடர்ந்து இந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. பின்னர் அந்த இடத்தில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. கம்பி வேலி அமைக்கப்பட்டதற்கு இந்த கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு துணை தலைவர் கதிரவன் மற்றும் அ.தி.மு.க.-தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேரூராட்சி தலைவர் கூட்ட தீர்மானம் இல்லாமல் நள்ளிரவில் அந்த இடத்தில் கம்பி வேலி அமைத்துள்ளார் என்றனர். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தலைஞாயிறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story