அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
x

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார்.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தர்மலிங்கம் (வயது 70). பாளையங்கோட்டை தொகுதியில் கடந்த 1991-1996-ம் ஆண்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர், தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளராக இருந்தார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை சாந்திநகர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

தர்மலிங்கத்தின் உடல் நெல்லை அருகே மேலச்செவலில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


Next Story