அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x

திருமருகலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.திட்டச்சேரி பேரூர் செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட துணை செயலாளர் அபுசாலி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன்.எம்.எல்.ஏ., மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆசைமணி, மாவட்ட அவை தலைவர் ஜீவானந்தம், தலைமை கழக பேச்சாளர்கள் அன்பழகன், நல்லுசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.


Next Story