அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என திருவாரூரில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ.கூறினார்.
திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 50-ம் ஆண்டு பொன்விழா நிறைவு விழாவும், 51-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவாரூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஏழை- எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியினை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்டி காத்து வருகிறார்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி
தி.மு.க. ஆட்சியில் மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் நிறுத்தம் என அடுக்கடுக்கான குறைபாடுகளால் மக்கள் தினந்தோறும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மக்கள் ஆதரவுடனும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன் வாசுகிராம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், வர்த்தக பிரிவு செயலாளர் ரயில்பாஸ்கர், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்,