அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்றனர்
மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், வடக்கு ஒன்றிய செயலாளருமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், நகர செயலாளர் செந்தமிழன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆத்தூர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மணல்மேடு நகர செயலாளர் தொல்காப்பியன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெண்களின் சிரமங்களை உணர்ந்து, வாழ்வாதாரத்தை உயர்த்த தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டு வந்து ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கியவர் ஜெயலலிதா. மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கே திருப்பி கொடுத்தார். ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் ஜல்லி, சிமெண்டு, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களில் விலை உயர்ந்து விட்டது' என்றார். கூட்டத்தில் அ.தி.மு.க. பேச்சாளர் ஜெயவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, சக்தி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.