அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பழனியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பழனி நகர், ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், பழனி சட்டமன்ற தொகுதி நிர்வாகி ரவிமனோகரன், நகர செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, மதுரை மாநாட்டில் பழனி பகுதியில் இருந்து அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மாற்றுக்கட்சியை சேர்ந்த 50 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பழனி ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன் (கிழக்கு), முத்துச்சாமி (மேற்கு), மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், மாவட்ட மீனவரணி செயலாளர் மகுடீஸ்வரன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் நடராஜன், பெரியம்மாபட்டி ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், வக்கீல் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.