அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருவாரூர்

தி.மு.க. அரசின் சொத்து வரி, மின்கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 9-ந்தேதி பேரூராட்சிகளிலும், 13-ந்தேதி நகராட்சிகளிலும், 14-ந்தேதி ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசுகையில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜாமணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர் தமிழ் செல்வம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story