அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடந்தது.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொருளாளர் பங்க் வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 1-ந்தேதி மாலை நடைபெறும் மே தின பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுக்க முடியாது
எம்.ஜி.ஆர். 17 லட்சம் உறுப்பினர்களை வைத்திருந்தார்.. அதை 1½ கோடி உறுப்பினர்களாக ஜெயலலிதா உயர்த்தி கட்சியை வலிமையாக்கினார். தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 கோடி உறுப்பினர்களாக உயர்த்துவார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணிதான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவமூர்த்தி, மாரியப்பன், பாலு ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், முருகன், இணை செயலாளர் உமாராஜ், துணைச் செயலாளர் லட்சுமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்து, வர்த்தக அணி செயலாளர் ராம்ராஜ், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன்மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுந்தரபாண்டியன், மகளிரணி செயலாளர் ஜமுனாராணி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வீரக்குமார், சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்கென்னடி, சரோஜா, பட்டு ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.