அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகை
அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகை
தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் செம்மங்குடி, தண்டாளம், பருத்திச்சேரி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணி எடுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நடைபெறும் பணிகள் முழுவதும் ஊராட்சி மன்றத்தினால் நிர்வகிக்கப்படும் பணியாகும். இதில் ஒன்றிய அலுவலகம் ஒப்பந்ததாரர்கள் மூலம் தலையீடு செய்வது முற்றிலும் முரண்பாடானது. இதனை கண்டித்து அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஏ.வி.கே. அசோக்குமார், ஜி. முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திருவிடைமருதூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து ஆணையர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.