அ.தி.மு.க.வினர் கண்டன ஊர்வலம்
அ.தி.மு.க.வினர் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
சாத்தூர்,
ஜெயலலிதா குறித்து சா்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து அ.தி.மு.க. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாத்தூர் நகர் போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து சாத்தூர் நகர் பகுதியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்வதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நற்பெயர் எடுப்பதற்காகவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஜெயலலிதா பற்றி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். இந்த அ.தி.மு.க.வில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்தவர். இவ்வாறு அவர் பேசி கொள்வதை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.