அ.தி.மு.க. சார்பில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது


அ.தி.மு.க. சார்பில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது
x

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சிக்கு சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனுமதி பேச்சுவார்த்தை கூட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின் தலைமையில் நடந்தது. தாசில்தார் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜு, பேரூராட்சி அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓ.எஸ். மணியன், பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.


Next Story