அ.தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்
கீழ்வேளூரில் அ.தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம் மற்றும் கீழ்வேளூர் நகர அ.தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் கீழ்வேளூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா தலைமை தாங்கினார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் தங்கம், கீழ்வேளூர் நகர மகளிரணி செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முரளி வரவேற்றார். கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமனம் செய்ய வேண்டும். ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் மகளிர் அணியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை நிறுத்திய தி.மு.க. அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் இளவரசி தங்கராசு, மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் மீனா, ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.