அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை கூட்டம்


அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை கூட்டம்
x

திருமருகலில் அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகலில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மாணிக்கவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாசறை கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிப்பது, பாசறையில் அடிப்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் திட்டச்சேரி நகர செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்சந்தர் மற்றும் ஒன்றிய நிர்வாகி கலந்து கொண்டனர்.


Next Story