அ.தி.மு.க. இளைஞரணி கூட்டம்


அ.தி.மு.க. இளைஞரணி கூட்டம்
x

திருவெண்காட்டில் அ.தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.. அவைத் தலைவர் சிவ மனோகரன், துணைச் செயலாளர் திருமாறன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி செயலாளர் நாஞ்சில் கார்த்திக் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். கீழமூவக்கரை-திருமுல்லைவாசல் இணைப்பு பாலம் அமைக்க கடந்த ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பணிகள் மிகவும் தாமதமாக நடக்கிறது. பணிகளை விரைவுப்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்கை மடத்தில் இயங்கி வரும் தபால் நிலையத்தை குறித்த நேரத்தில் திறந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவெண்காடு அரசு சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் பணி புரிய டாக்டரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட அமைப்பு சாரா சங்க செயலாளர் அய்யாவு, ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.



Next Story