திருமணம் ஆகாத ஏக்கத்தில் திராவகம் குடித்து வாலிபர் தற்கொலை


திருமணம் ஆகாத ஏக்கத்தில்  திராவகம் குடித்து வாலிபர் தற்கொலை
x

திருமணம் ஆகாத ஏக்கத்தில் திராவகம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சேலம்,

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). இவர் கடந்த 31-ந் தேதி வீட்டில் இருந்த திராவகத்தை எடுத்து குடித்துவிட்டார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தினேஷ்குமார் உடல்பருமனால் அவதிப்பட்டதால் அவருடைய திருமணம் தள்ளிக் கொண்டே போனது. இதனால் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த அவர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story