Normal
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை திங்களூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 23). இவர் தஞ்சை ஜவுளிசெட்டி தெருவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இவர், கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பயனில்லை. சம்பவத்தன்று மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து அவர் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story