விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே பிடாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் தமிழரசன் (வயது 25). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றதாக தெரிகிறது. இதை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் விஷத்தை குடித்தார். இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த, அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் தமிழரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் போில் திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story