விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கொடைரோடு அருகே வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்
கொடைரோடு அருகே உள்ள ராஜதானிகோட்டையை சேர்ந்தவர் வேல்மணி (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த வேல்மணி, கடந்த 16-ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்மணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story