எலிப்பசை தின்று வாலிபர் தற்கொலை
எலிப்பசை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
தொட்டியம்:
தொட்டியம் கிருஷ்ணாபுரம் குடித்தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 24). பி.ஏ. பட்டதாரியான இவர், கடந்த சில ஆண்டுகளாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலிகளை கொல்ல பயன்படுத்தும் பசையை (விஷம்) தின்று மயங்கி விழுந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தொட்டியம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story