திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை


திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
x

சாத்தான்குளம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாததான்குளம் அருகே உள்ள புளியங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு சிவகுமார் (வயது 29) உள்பட 5 மகன்கள். இவர்களில் 4 பேருக்கு திருமணமான நிலையில் சிவகுமாருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். அவருக்கு மனவளர்ச்சி சற்று குறைபாடு காரணமாக திருமண வரன் அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சிவகுமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் தாமோதரன், சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story