பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி இளம்பெண் சைக்கிள் பயணம்-போலீஸ் கமிஷனர் வாழ்த்து
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளம்பெண் சேலத்திற்கு வந்தார். அவருக்கு போலீஸ் கமிஷனர் வாழ்த்து தெரிவித்தார்.
சேலம்
அன்னதானப்பட்டி:
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டம், நட்டாரம் கிராமத்தை சேர்ந்த ஆஷா மால்வியா (வயது 19). சமூக ஆர்வலரான இவர், 'பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற நோக்கத்தை வலியுறுத்தி, இந்தியா முழுவதும் தனி ஒருவராக சைக்கிளில் சென்று பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்த அவர் நேற்று சேலம் வந்தார். இந்த இளம்பெண் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் பூங்கொத்து கொடுத்து அந்த இளம்பெண்ணை வரவேற்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story