வாலிபர் மாயம்


வாலிபர் மாயம்
x

வாலிபர் மாயம் ஆனார் .

கரூர்

தோகைமலை அருகே உள்ள மணிய கவுண்டம்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நவீன்குமார் (வயது 25). இவர் சின்னப்பனையூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நவீன்குமார் வீட்டில் இருந்து உள்ளார். அப்போது அவரது பெற்றோர் உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது நவீன்குமாரை காணவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் நவீன்குமார் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான நவீன்குமாரை தேடி வருகின்றனர்.


Next Story