குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
கோவில்பட்டியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கோவில்பட்டி என்லைட் பயிற்சி மையத்தில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா தலைமை தாங்கினார். போட்டித்தேர்வு பயிற்சி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டித்தேர்வு மாணவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், பயிற்சி மைய நிர்வாகி மகேஷ்வரன், சைல்டு லைன் உறுப்பினர் பாரதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கோவில்பட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வீராச்சாமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை வழங்கினார். மாணவி செல்வி நன்றி கூறினார்.