காரைக்குடியில் மசாஜ் சென்டர்களில் விபசாரம்; 5 பேர் கைது


காரைக்குடியில் மசாஜ் சென்டர்களில் விபசாரம்; 5  பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:39+05:30)

காரைக்குடியில் மசாஜ் சென்டர்களில் விபசாரம் செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் துணை சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் காரைக்குடி மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மசாஜ் சென்டர் உரிமையாளரான 38 வயதான பெண், வாடிக்கையாளர்கள் ஏகலைவன்(42), காரைக்குடியை சேர்ந்த ராஜேசுவரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரூ.3,500, ேமாட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்குடியில் மற்றொரு மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். அந்த மசாஜ் சென்டர் மேலாளர், வாடிக்கையாளர் காமராஜ்(41) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story