தாயுடன் கள்ளத்தொடர்பு; மகளுக்கும் பாலியல் தொல்லை -கறிக்கடை ஊழியர் கைது
தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கறிக்கடை ஊழியர் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் . போலீசார் கறிக்கடை ஊழியரை கைது செய்தனர்
மதுரை யாகப்பாநகர் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த் (வயது 27). கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் கணவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளார். எனவே அந்த பெண்ணிற்கு உதவி செய்வது போல் நடித்து அவரிடம் வசந்த் நெருங்கி பழகினார்.
அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. எனவே வசந்த் அந்த பெண்ணிற்கு தனியாக வீடு பிடித்து கொடுத்து அவருடன் குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிற்கு 12 வயதில் மகள் உள்ளார். 6-ம் வகுப்பு படித்து வந்தார். பெண்ணின் வீட்டிற்கு வசந்த் அடிக்கடி செல்லும் போது, அந்த சிறுமியின் மீது அவர் ஆசைப்பட்டார்.
பின்னர் அந்த சிறுமியை மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும், உனது தாயாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அந்த சிறுமி பயந்து போய் வெளியே சொல்லவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரின் பாலியல் தொல்லை அதிகரித்தது.
எனவே அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து சிறுமியின் தாயிடம் கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த சிறுமி, அவரது தாயார் மற்றும் வசந்த் ஆகியோரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வசந்தை கைது செய்தனர்.
தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு அவருடைய மகளான 6-ம் வகுப்பு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.