வல்வில் ஓரி விழா முன்னேற்பாடுகள்


வல்வில் ஓரி விழா முன்னேற்பாடுகள்
x

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா முன்னேற்பாடுகள் குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாமக்கல்

வல்வில் ஓரி விழா

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி வல்வில் ஓரி சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். சில நேரங்களில் எந்த அமைப்பினர் எப்போது மாலை அணிவிப்பது என்பது தொடர்பாக பிரச்சினைகள் வரும். எனவே இதை தவிர்க்க நேற்று நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு) ராஜூ, துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு மற்றும் போலீஸ் அதிகாரிகள், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அமைப்பினரும் எந்த நேரத்தில் மாலை அணிவிக்க வர வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. வாடகை வாகனம் அனுமதிக்கப்படாது எனவும், சொந்த பயன்பாட்டிற்கான வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் காரவள்ளி வழியாக மலையில் ஏறி மாலை அணிவித்து விட்டு, முள்ளுக்குறிச்சி பாதை வழியாக இறங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கமலகண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

3 நாட்கள் மதுபான கடைகள் மூடல்

கொல்லிமலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரிவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கொல்லிமலை தாலுகாவில் உள்ள டாஸ்மாக் கடைகளை வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 3 நாட்கள் மூட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். எனவே கொல்லிமலை தாலுகாவில் செம்மேடு, காரவள்ளி, செங்கரை, சோளக்காடு ஆகிய 4 இடங்களில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளும் 3 நாட்கள் மூடப்படும். மேற்கண்ட தேதிகளில் எக்காரணத்தை கொண்டும் திறக்கவோ அல்லது மதுபானங்களை விற்பனை செய்யவோ கூடாது. இதை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story